Sat. Apr 20th, 2024

முடிவெடுக்க முடியாதவர்கள் ஏன் பதவிகளில் இருக்கிறார்கள் – பாமரமக்கள் கேள்வி.

முடிவெடுக்க முடியாதவர்கள் ஏன் பதவிகளில் இருக்கிறார்கள் என பாமரமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

குறித்த பகுதிகளில் ஏற்படும் அனர்த்தங்கள் தொடர்பாக அந்தந்த மாகாண,  மாவட்ட, வலய அதிகாரிகள் முடிவெடுக்க முடியும் என இலங்கை கல்வி அமைச்சு அறிவிக்கப்பட்ட போதிலும், முடிவெடுக்க முடியாமல் கல்வி அதிகாரிகள் ஏன் பதவிகளில் இருக்க வேண்டும் என பாமரமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஒரு மாணவனின் பெற்றோர் வகுப்பாசியரை நாளை பாடசாலை நடைபெறுமா? என கேட்க, அதிபரை கேட்க வேண்டும். அதிபரை கேட்டால் கோட்டக் கல்வி பணிப்பாளரை கேட்க வேண்டும்.  கோட்டக் கல்விப் பணிப்பாளர் வலயக் கல்விப் பணிப்பாளரை கேட்க வேண்டும் வலயக் கல்விப் பணிப்பாளர் மாகாண கல்விப் பணிப்பாளரை கேட்டால் அனர்த்தத்திற்கு அந்தந்த மாவட்ட செயலாளர் பொறுப்பு. அவரை கேட்டால்,  இன்னமும் தமக்கு அனர்த்தத்திற்குரிய அளவு வரவில்லை. பாடசாலை தொடர்பாக அவர்களே முடிவெடுக்க வேண்டும். அதன்பின்னர் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தான் முடிவெடுக்க வேண்டும். மாகாண கல்வி அமைச்சின் செயலாளரை கேட்டால் மாகாண ஆளுநரை கேட்க வேண்டும். இதெல்லாம் எப்ப முடியும் என பார்க்க இடைக்கிடையில் ஆசிரிய சங்கங்கள் தமது அறிக்கைகள்.  இதெல்லாம் முடிவு எப்ப வரும் என கல்வி அமைச்சு அறிவிக்கும் பாடசாலை இல்லை என. இவ்வளவு அதிகாரிகளுக்கும் தமக்கு கீழ் இருக்கும் நிறுவனங்கள் தொடர்பான முடிவெடுக்க முடியவில்லை என்றால்,  ஏன் அப்பதவியில் இருக்க வேண்டும் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இன்று நண்பகல் 12 முதல் காற்றுடன் கூடிய மழை பரவலாக பெய்து வருகின்றது. மன்னார் மாவட்டத்தில் கடும் காற்றினால் பாதிப்பு,  வடமராட்சி கிழக்கு மற்றும் கரையோரப் பாடசாலைகள் அச்சம் இன்னிலையில் நாளை பாமரமக்களாகிய எங்களாலேயே நாளை பாடசாலை நடாத்துவது கடினம் என தெரிகின்ற வேளை, இன்று இரவு 9.30 வரை வடமாகாண பரீட்சைகளாவது நாளை நடைபெறாது என அறிவிப்பதற்கு எவருக்கும் அதிகாரம் இல்லை. இனிமேலாவது பதவியில் இருப்பவர்கள் சுயமாக முடிவெடுத்து அறிக்கைகளை வெளியிடுங்கள் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்