Sat. Apr 20th, 2024

மின்வெட்டு தொடரும், இன்றும் மின்வெட்டு

உயர்தரப் பரீட்சை இன்று- 23 ஆரம்பமாகியுள்ள நிலையில் இரவில் மின்சாரத்தை நிறுத்த வேண்டாம் என பொது பயன்பாட்டு ஆணைக்குழு மின்சார சபைக்கு கோரிய போதும் மின்சார சபை நிராகரித்துள்ளது.

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் பிள்ளைகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்வது அனைவரினதும் பொறுப்பாகும் என பொது பயன்பாட்டு ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

மின்சார சபை தலைவர் கூறுகையில்-

மின்சாரம் தடைபடுவதை நிறுத்த, CEB மற்றும் Independent Power Plants (IPP) ஆகிய இரண்டின் அனல் மின்நிலையங்களையும் அதிகமாகப் பயன்படுத்த வேண்டும் என்று CEB தலைவர் கூறியுள்ளார்.

இதற்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இலங்கை மின்சார சபைக்கு கடன் வசதிகளை வழங்குவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

“CEB கடுமையான பணப்புழக்க பிரச்சினைகளை எதிர்கொள்கிறது,” என்று அவர் கூறினார்.

மக்கள் வங்கியோ அல்லது ஏனைய வங்கிகளோ CEBக்கு கடன் வசதிகளை வழங்க மறுக்கிறது, ஏனெனில் CEB ஆனது கட்டண அதிகரிப்பு இன்றி கடன்களை திருப்பிச் செலுத்தும் திறன் கொண்டதாகக் கருதவில்லை,” என்று அவர் மேலும் கூறினார். இந்த பிரச்சினையை நிவர்த்தி செய்ய வேண்டும்.

இன்று பகலில் ஒரு மணி நேரமும் இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடங்களும் மின்சாரம் தடைப்படும். க.பொ.த உயர்தரப் பரீட்சையை முன்னிட்டு இரவு 07.00 மணிக்குப் பின்னர் மின் தடைகளை இடைநிறுத்த PUCSL தீர்மானித்திருந்த போதிலும் மின் வெட்டு அட்டவணை இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி பகுதியில் மாலை 5 மணி தொடக்கம் 6 மணி வரைக்கும், இரவு 8.40 மணி தொடக்கம் 10 மணி வரைக்கும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்