Thu. Apr 25th, 2024

மாகாண மட்ட போட்டி தொடர்பாக விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்கள்

வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான ஆண்கள் பெண்களுக்கான தடகளத் தொடர் நாளை மறுதினம் 30ம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் 4ம் திகதி வரை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில்  நடைபெறவுள்ளது.
போட்டியில் பங்குபற்றும் வீரர்கள் மற்றும் தங்குமிட வசதிகள், சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள், ஒழுங்கு விதிமுறைகள் தொடர்பாக வடமாகாண உடற்கல்வி உதவிக் கல்வி பணிப்பாளர் இ.இராஜசீலன் அவர்களால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதில் மெய்வல்லுனர் போட்டியை மிகவும் சிறப்பாக நடைபெறுவதற்காக அனைவரது பங்களிப்பு அவசியம்.
அந்த வகையில் போட்டி தொடர்பாக
1.மாணவர்களது ஒழுக்கம், உடை, தலைமுடி தொடர்பில் அதி கூடிய கவனம் எடுக்கவும்.
2.உரிய ஆவணங்கள் இன்றி போட்டியில் பங்குபற்ற முடியாது என்பதில் கூடிய கவனம் செலுத்துடன் அவை பற்றிய விவரங்களை உங்கள் வலய உதவிக்கல்விப்பாளர்கள்/ஆசிரிய ஆலோசகரிடம் பெற்றுக் கொள்ளவும்
3.தங்குமிடம் தேவைப்படுவோர் தங்கள் உதவிக் கல்விப் பணிப்பாளரினூடாக அறிவிக்கவும். 4.இரவு8மணிக்கு முன் முதல் நாள் தங்குமிடம் தேவையானோர்
ஒதுக்கப்பட்ட பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும்.
5.போட்டிகள் தொடங்கிய நாளில் இருந்து மாலை 6.30 முன் ஒதுக்கப் பட்ட பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும்.
6.தங்குமிட பாடசாலைகளின் சொத்துக்கள், நீர், மின்சாரம் பற்றி கூடிய கவனம் செலுத்தவும். 7.தங்குபவர்கள் தங்களது பெயர்பட்டியல்களை பாடசாலைகளுக்கு கொடுத்தல் வேண்டும்.
8.ஆண் மாணவர்கள் தங்குமிடங்களில் நிரந்தர நியமன ஆண் ஆசிரியரும், பெண் மாணவர்கள் தங்குமிடங்களில் பெண் நிரந்தர ஆசிரியர் தங்குவது கட்டாயமானது. மேலும் தங்குமிட பாடசாலைகள், மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பொலிஸ் கண்காணிப்பு தொடர்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
9.உரிய நேரத்தில் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளதால் போட்டியாளர்களை சரியாக வழிப்படுத்தவும்.
போட்டிகள் நிறைவடைந்த மாணவர்களை அன்றைய தினம் வீடுகளுக்கு பாதுகாப்பான முறையில் அனுப்புதல் சிறந்தது.
10.போட்டிகளில் பங்கு பற்றும் மாணவர்கள் தங்களது இலக்கங்களை சரியான முறையில் அணிவது அவசியம்.
ஆரம்ப நிகழ்வில் அனைத்து மாணவர்களும் தங்கள் வலயங்களை பிரதிநிதிப்படுத்தி உரிய உடைகளுடன் பங்குபற்ற வேண்டும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்