Wed. Apr 24th, 2024

மருத்துவ பீட மாணவர்கள் தற்கொலை கல்விப் புலத்திற்கு சவால்

மருத்துவபீட மாணவர்களின் இடை இடையே ஏற்படும் தற்கொலைகள் கல்விபுலத்தில் அச்சத்தை தோற்றுவிக்கின்றது என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்துள்ளார். மருத்துவ பீடத்திற்கு தெரிவாவது என்பதே சவால்மிக்கது. மிகவும் கடின உழைப்பின் மத்தியிலே போட்டியின் வெளிப்பாட்டில் குறிப்பிட்ட மாணவர்கள் தெரிவாகின்றனர். மருத்துவ பீடத்துக்கு தெரிவானதும் பெற்றோர்களும் பாடசாலை சமூகமும் பெருமூச்சு விட்டு மகிழ்ச்சியை கொண்டாடுகிறார்கள். ஏனெனில் தனது பிள்ளை மருத்துவர், பாடசாலையை விட பல்கலைகழகம் சிறப்பாக பிள்ளைகளை பாதுகாக்கும் வளப்படுத்தும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடே ஆகும். ஆனால் அவை இன்று  தவிடுபொடியாக்கப்படுகின்றது. எதிர்கால மாணவர்களின் கனவுகளும் சிதைக்கப்படுகின்றது. அது மட்டுமன்றி போட்டியின் மத்தியில் கட்டவுட்டில் தெரிவாகிய நிலையில் இவ்வாறான தவறான முடிவுகள் எடுக்கப்படுவதால் ஏனைய மாணவர்களின் சந்தர்ப்பமும் தவறவிடப்படுகிறது. இந்த மருத்துவபீட மாணவர்களின் தற்கொலைக்கான காரணங்கள் கண்டறியப்படாமை கல்விப்புலத்துக்கு விடுக்கப்படும் சாவுமணி ஆகும். கற்றல் சுமையால் இறப்பு என்பது ஏற்றுக்கொள்ள முடியாததும் எதிர்கால மாணவர்களின் மருத்துவர் என்ற எண்ணத்தை கேள்விக்கு உள்ளாக்கும் ஒநு விடயமாகும். இதனால் சமூக கருசனை கொண்டு மருத்துவ பீடம் இது வரையில் தற்கொலை செய்த மாணவர்களின் தற்கொலைக்கான காரணத்தை கண்டறிவதுடன் அதனை இல்லாது ஒழிக்க வேண்டும். பெற்றோர்களும் பிள்ளைகளின் மனநிலையை அறிந்து செயலாற்ற வேண்டும். தமது விருப்பங்களை பிள்ளைகளுக்கு புகுத்த முனையக்கூடாது. பாடசாலைகள் மாணவர்களை சவால்களுக்குள் வாழ கற்றுக்கொடுக்க வேண்டும். ஏனெனில் தற்கொலைகளையே தீர்வாக எண்ணுகிறார்கள்.அதில் இருந்து விடுபட அனைவரும் தமது பங்களிப்பினை வழங்க முன்வரவேண்டும் என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப தர்மகுமாரன் கேட்டுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்