Fri. Apr 26th, 2024

மரணச் சடங்கின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டோர் தனிமைப்படுத்தலில்

மரணச் சடங்கின் இறுதி ஊர்வலத்தில் தனிமைப்படு்தல் கட்டுப்பாடுகளை மீறும் வகையில் செயற்பட்டவர்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டதுடன் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவுள்ளது.
இச்சம்பவம் பருத்தித்துறை சுகாதார பிரிவில் நடைபெற்றுள்ளது. பருத்தித்துறை புலோலி மேற்குப் பகுதியில் கொரோனா கட்டுப்பாட்டுக்கான தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி மரணச் சடங்கின் இறுதி ஊர்வலத்தை நடத்தியவர்கள் பொது சுகாதார பரிசோதகர் ஜென்சன் றொனால்ட்டினால் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
சமூக இடைவெளியைப் பேணாதும் முகக் கவசங்கள் இன்றியும் நூற்றுக் கணக்கானவர்கள் ஒன்று திரண்டு பொது மக்களின் போக்கவரத்துக்கு இடையூறாக நின்று மதுபோதையில் மேள வாத்தியத்துடன் செயற்படும் போது பொது சுகாதார பரிசோதகரால்  அறிவுறுத்தியும் அதனை மீறி கடமைக்கு இடையூறு செய்ய முயன்றவர்கள் அவர்களது வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
அத்துடன் கற்கோவளம் பகுதியில் இரவு நேர கோவில் வழிபாடுகளையும் நிகழ்ச்சிகளையும் அனுமதியின்றி நடாத்தியதோடு நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றுகூட காரணமாக இருந்தவர்களும் அவர்களது வீடுகளில் பொது சுகாதார பரிசோதகரால் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இவர்களுக்கான பிசிஆர் பரிசோதனைகள் பத்தாம் நாளில் மேற்கொள்ளப்பட்டு சுயதனிமைப்படுத்தல் காலம் 14 நாட்கள் முடிபுற்ற பின் சட்ட நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்