Fri. Mar 29th, 2024

பொலிகண்டி செவ்வானத்திற்கு தங்கம்

கனிஸ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட தடகள தொடரில் பெண்களுக்கான தட்டெறிதலில் பொலிகண்டி இந்துத் தமிழ் கலவன் பாடசாலை மாணவி தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கனிஸ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டிகள் தியகம மகிந்த ராஜபக்ச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.
இதில் 18 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் பொலிகண்டி இந்துத் தமிழ் கலவன் பாடசாலையை பிரதிநிதித்துவம் செய்த எஸ் செவ்வானம் 29.46 மீற்றர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்