Sat. Apr 20th, 2024

பொன்விழா கிண்ண கால்பந்தாட்டம்பலாலி விண்மீன் இறுதியாட்டத்திற்கு தகுதி

பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக் தமது பொன்விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட கால்பந்தாட்ட தொடரில் பலாலி விண்மீன் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளது.

இதன் அரையிறுதியாட்டம் இன்று சனிக்கிழமை அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.
அரையிறுதியாட்டத்தில் பலாலி விண்மீன் அணியை எதிர்த்து வதிரி பொம்மேர்ஸ் அணி மோதியது.
முதல் பாதியாட்டத்தில் பலாலி விண்மீன் அணியினரின் கட்டுப்பாட்டில் பந்து காணப்பட்ட போதிலும் பொம்மேர்ஸ் அணி வீரர் துசிகரன் ஒரு கோலைப் பதிவு செய்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். ஆனால் சற்றும் சளைக்காமல் போராடிய பலாலி விண்மீன் அணி வீரர்  ஜோன் விஜித்
அடுத்த சில நிமிடங்களிலேயே
அடுத்தடுத்து இரு கோல்களைப் போட்டு அசத்தினர்.
தொடர்ந்தும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோன் விஜித் சிறப்பான முறையில் தட்டிக் கொடுக்க றெனோஜன்,  நிதுசன் கோல்களைப் பதிவு செய்ய முதல் பாதியாட்டத்தில் 4:1 என்ற கோல் கணக்கில் பலாலி விண்மீன் அணி முன்னிலை வகித்தனர்.
இரண்டாவது பாதியாட்டத்திலும் பலாலி விண்மீன் அணியின் வீரர் றெனோஜன் ஒரு கோலைப் பதிவு செய்யதுடன், சிறப்பான பந்துப் பரிமாற்றத்தை மேற்கொண்டு தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
அதனையடுத்து பலாலி விண்மீன் அணி வீரர் நிதுசன் மீண்டும் ஒரு கோலை பதிவு செய்ய ஆட்ட நேர முடிவில் பலாலி விண்மீன் அணி 6:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றனர். ஆட்ட நாயகனாக பலாலி விண்மீன் அணி வீரர் றெனோஜன் தெரிவுசெய்யப்பட்டார். இவருக்கான பதக்கத்தை அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் க.கனகராஜா விருந்தினராக கலந்து கொண்டு வழங்கி வைத்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்