Thu. Apr 25th, 2024

பூநகரி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான மகஜர் கையளிப்பு

மக்களின் விவசாயம் மற்றும் மீன்பிடி செயற்பாடுகளை மேற்கொண்டு தமது பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு பூநகரி பிரதேசத்தில் பல தடைகள் காணப்படுகின்றது.
அந்த தடைகளில் இருந்து மக்கள் விடுவிக்கப்பட்டால் மக்களின்
பொருளாதாரத்திற்கு மற்றும் வாழ்வாதாரத்திற்கும் உதவியாக அமையும் என 12 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் பூநகரி பிரதேச மக்களின் தேவைகள் குறித்து  பூநகரி பிரதேச செயலாளர் எஸ்.கிருஸ்ணேந்திரன் அவர்களிடம் நேற்று திங்கட்கிழமை மகஜர் ஒன்று  கையளிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட யுத்தத்தின் பின் மக்கள் தமது பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில்
பெரும் சவால்களை தொடர்ந்து எதிர்நோக்கி வருகின்றனர்.
குறிப்பாக பெண் தலைமைத்துவ
குடும்பங்கள் பெரும் இன்னல்களுக்கு மத்தியில் தமது வாழ்வாதாரத்தை கொண்டு
செல்கின்றனர்.
அதிலும் குறிப்பாக தற்போதைய நாட்டின் பொருளாதார நிலைமை மேலும் மக்களை அவல நிலைக்கு கொண்டு செல்கின்றது.
விவசாய ரீதியான செயற்ப்பாடுகள்
மற்றும் மீன்பிடி ரீதியான செயற்பாடுகள் மிகவும் கவலைக்குரிய விடயமாகவே
காணப்படுகின்றது.
அதிகம் கடல் வளத்தையும் விசாயத்தையும் நம்பி மக்களின் வாழ்வாதாரம் தங்கியுள்ளது.
அதற்கு அமைவாக,
1, காணிக்கான உறுதி பத்திரங்கள் விரைவாக வழங்கப்பட வேண்டும்.
2. காணி தேவைப்படும் குடும்பங்களுக்கு காணிகள் வழங்கப்பட வேண்டும்.
3.நெற் செய்கைக்காக வயல் நிலங்கள் இல்லாத நபர்களுக்கு வயல் நிலங்கள்
வழங்கப்பட வேண்டும்.
4.இயற்கை விவசாய முறைமை தொடர்பாக விவசாயிகளுக்கு தேவையான
பயிற்சிகளை வழங்குதல் வேண்டும்.
5.பிரதேச ரீதியான அபிவிருத்தி சார்ந்த செயற்ப்பாடுகளுக்கு மக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்பட வேண்டும்
6.பூநகரி பிரதேசத்தில் எதிர் காலத்தில் சிறுபோக நெற் செய்கை நடைபெறுவதற்காக
அதற்கான நீர்ப்பாசன முறைகளுக்கான திட்டம் ஒன்றை தயாரித்தல் வேண்டும்.
7.பூநகரி பகுதியில் பரம்பரிய விதை வங்கி நிலையம் ஒன்று நிறுவப்பட வேண்டும்.
8.பூநகரி பகுதியில் விவசாய செயற்பாட்டில் யானை தாக்கத்தால் பாதிப்பிற்குள்ளாகின்ற கிராமங்களை அடையாளம் காணுதல் மற்றும் யானை தாக்கத்தை தவிர்ப்பதற்கான
திட்டத்தை தயாரித்தல் மற்றும் இழப்பீடுகளை வழங்கல் செயற்பாட்டை நடைமுறைப்படுத்தல் வேண்டும்.
9.ஆர்வமுள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்கள் விவசாய செயற்பாட்டில் ஈடுபடுவதற்கான ஊக்குவிப்புக்களை வழங்குதல் வேண்டும்.
10.மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கு வருடத்திற்கு ஒரு தடைவையேனும் மானிய
அடிப்படையில் மீன்பிடி உபகரணங்கள் வழங்குவதற்கான நடவெடிக்கையை
மேற்கொள்ள வேண்டும்.
12.பூநகரி பகுதியில் கிடைக்கப் பெறுகின்ற பசுப்பால் உற்பத்தி கால்நடை சங்கங்கள் ஊடாக முகாமைத்துவம் செய்யப்பட்டு, அந்த பால்கள் பொதி செய்யப்பட்டு மக்களின் நுகர்வுக்காக சென்றடைவதற்கான திட்டத்தை தயாரிதல் வேண்டும்
உள்ளிட்ட அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகளிற்கு தீர்வு பெற்று தருமாறு குறித்த மகஜரில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்