Thu. Apr 25th, 2024

பிரிட்டன் தேர்தல்: பிரதமர் போரிஸ் ஜோன்சன் பெரும்பான்மை வெற்றி!!

பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் கன்சர்வேடிவ் கட்சி பொதுத் தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்தில் 650 இடங்களைக் கொண்ட இங்கிலாந்து பாராளுமன்ற தேர்தல் நேற்று வியாழக்கிழமை தேர்தல் நடந்தது.

வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் தொழிலாளர் கட்சி சில இடங்களில் முன்னிலை பெற்ற நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சி முன்னிலை பெறத் தொடங்கியது.

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 326 இடங்கள் தேவைப்படும் நிலையில் கன்சர்வேடிவ் கட்சி 362 இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.

இதில் தொழிலாளர் கட்சிக்கு 203 இடங்கள் கிடைத்துள்ளன. இதன்படி கன்சர்வேடிவ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்