Fri. Apr 26th, 2024

பிரான்பற்று முன்பள்ளி கட்டடம் திறந்து வைக்கப்பட்டது

பண்டத்தாிப்பு பிரான்பற்று  உள்ளிட்ட 12 கிராமங்கள் இன்னும் இரு வருடங்களில்  பண்டத்தாிப்பு பிரதேச சபையாக விரைவில் மிளிரும் அதற்கேற்ப முன்னோடித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சுடாக  இத்திட்டம் வெற்றியளிக்கும் போது பிரான்பற்று கிராமம் ஒரு நகரத்திற்குாிய தோற்றத்தை பெறும் என வலி. தென்மெற்கு பிரதேச சபைத் தலைவா்  அந்தோனிப்பிள்ளை ஜெபனேசன் தெரிவித்துள்ளார்.
பிரான்பற்று முன்பள்ளி கட்டடம் நேற்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
அவுஸ்திரேலியா நாட்டை வசிப்பிடமாக  கொண்ட  சமூக ஆா்வலா்  ஜெயக்குமாா் சிவபுவனேந்திரராஜா  அவா்களின் 3.5 மில்லியன் ரூபா சொந்த நிதிப்பங்களிப்பில்  பிரான்பற்று ஸ்ரீமுருகன் முன்பள்ளி புனரமைப்பு நேற்று (18.10.2021  திங்கட்கிழமை) காலை திறந்த வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் வலி.தென்மேற்கு பிரதேசசபை தவிசாளா் அ, ஜெபனேசன் – வலி தென் மேற்கு  பிரதிப் பிரதேச செயலாளா்  திருமதி செல்வகுமாாி  நேசரட்ணம் இணைந்து  நிதிப்பங்களித்து காணி வழங்கியோரது நினைவு கற்கள் மற்றும் நவீன கட்டடிடத்தை  திறந்து  வைத்தனா்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட   தவிசாளா் அ. ஜெபனேசன் மேலும் தெரிவிக்கையில் இன்னும் சொற்ப காலங்களில் பிரான்பற்றில் உள்ள அனைத்து சபை வீதிகளும் அழகாக முழுமை பெற்றுவிடும். அந்த அளவிற்கு முயல் வேகத்தில் வலி.தென்மேற்கு பிரதேச சபையை பிரதி  நிதித்துவப்படுத்தும் சி.மகேந்திரன் அபிவிருத்தி  தொடா்பில்  மும்மரமாக செயற்படுகின்றாா். அவரது செயல்திறன்  மிக்க பங்களிப்பு என்பது  அளவிடமுடியாதது, விரைவில் எமது சபைக்குட்பட்ட  நவீன தரம் கொண்ட  சிறுவா் புங்கா திறக்கும் நிகழ்வு இடம்பெறும் அதன்போது வலி.தென்மேற்கு சிறுவா்கள் முழு நன்மை அடைவா் என்றாா்.  இதனைவிட  மயானம் , மின்குமிழ்  என்பனவும்  விரைவில்  பிரான்பற்று நொக்கி நகா்த்தப்படம் என்றாா்.இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்த கொண்ட  வலி.தென்மேற்கு பிரதேச செயலாளா் (பிரதி) திருமதி நேசரட்ணம் செல்வகுமாாி குறிப்பிடுகையில்,  பிரான்பற்று  கிராமத்திற்கு இரு முன்னோடி சமூக ஆா்வலா்கள் பங்காற்றி கிராமத்தை அழகு செய்கின்றனா். அதில் அவுஸ்ரேலியா வாழ் சி.ஜெயக்குமாா் நிதியை அள்ளிவழங்க அதனை நோ்மையுடன்  முன்னெடுக்க பிரதேசபை உறுப்பினா் சி.மகேந்திரன் ஒளிவிளக்காக செயற்படுகின்றாா்.
 
இவ்வாறு கிராமங்கள் நகரங்கள் வளா்ச்சியடைய  வெளிறாட்டில் உள்ள புலம்பெயா் எமது உறவுகள் உதவ முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.
இதனைவிட பிரான்பற்றில் கொவிட் 19 ஆக்கிரமித்த கஸ்ட காலத்தில்  10 ஆயிரம் ரூபா உலா் உணவுப் பொதிகள் வழங்கிய நிகழ்வுகள் பிரான்பற்றில் பதிவாகியிருந்ததை யாவரும் அறிவீா்கள், இது கிராமத்தின் எழுச்சியை காடடியுள்ளது என்றாா்.
இக்கட்டிட  புனரமைப்பில் தோள்நின்று பணியாற்றிய தொ்ண்டா்களுக்கு பாிசில் பொதிகளை  தவிசாளா் – பிரதேச செயலாளா் இணைந்து   வழங்கி வைத்தனா்.
 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்