Thu. Apr 25th, 2024

பிரதேச செயலக ஊழியர்கள் எரிபொருள் பெறுவதில் ஆர்வம் மக்கள் விசனம்

பிரதேச செயலக ஊழியர்கள் பலர் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் வரிசையில் நின்று எரிபொருள் பெறப்பட்டமையால் அசெளகரியங்களைச் சந்தித்ததாக மக்கள்  விசனம் வெளியிட்டுள்ளனர்.

நெல்லியடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் இன்று எரிபொருள் வழக்கப்பட்டது.
இதில் கரவெட்டி பிரதேச செயலக கிராம சேவகர்கள் உத்தியோகத்தர்கள் என பலரும் ஒரு வரிசையை ஏற்படுத்தி நின்றனர். இதற்கு பொதுமக்கள் தமது விசனத்தை வெளியிட்டுள்ளனர்.
கரவெட்டி பிரதேச செயலகத்தில் பணிபுரியும் பல உத்தியோகத்தர்கள் அருகிலிருந்தே கடமைக்கு வருகின்றனர். கிராம சேவகர்கள் பலர் அருகில் உள்ள கிராமங்களிலேயே பணியாற்றுகின்றனர். இந்நிலையில் அவர்கள் பொதுமக்களுக்கு பல நாட்களாக காத்திருந்து பெறும் எரிபொருளை எவ்வாறு வழங்க முடியும்.  அத்துடன் அரச நிறுவனங்கள் பல குறித்த சிலரை மாத்திரமே பகுதி பகுதியாக அழைக்கின்றனர். அத்துடன் பல கிராம அலுவலர்கள் இளமையானவர்கள் இவர்கள் அருகில் உள்ள அலுவலகத்திற்கு சைக்கிளில் செல்ல முடியும். ஆனால் அவ்வாறில்லாமல் அவர்களும் எரிபொருளை பெறுவதற்காக புதிய வரிசையை ஏற்படுத்தி பெற்றோல் பெறுவது எந்த வகையில் நியாயம் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக பிரதேச செயலாளர் கவனமெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்