Thu. Apr 25th, 2024

பருத்தித்துறை மிதுன்ராஜ் புதிய சாதனை

கனிஸ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட தடகளத் தொடரில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் எஸ்.மிதுன்ராஜ் தட்டெறிதலில் புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளார்.
கனிஸ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட தடகள தொடர் தியகம ராஜபக்ச மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
இதில் 23 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த எஸ். மிதுன்ராஜ் 43.64 மீற்ரர் தூரம் எறிந்து புதிய சாதனையை பதிவு செய்து தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார். கடந்த 2010ம் ஆண்டு இராணுவ வீரர் சரித் கப்புக்கொட்டுவ அவர்களினால் எறியப்பட்ட 42.64 மீற்ரர் தூரத்தையே மிதுன்ராஜ் 43.64 மீற்ரர் தூரம் எறிந்து புதிய சாதனையை பதிவு செய்துள்ளார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்