Fri. Mar 29th, 2024

பருத்தித்துறை கிரிக்கெடில் கழுகுகள், ஐக்கிய அணிகள் சம்பியன்

பருத்தித்துறை பிரதேச கிரிக்கெட்டில் ஆண்கள் பிரிவில் கழுகுகள் அணியும், பெண்கள் பிரிவில் பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக் கழக அணியும் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
இதன் இறுதியாட்டங்கள்  நேற்று  ஞாயிற்றுக்கிழமை ஸ்பைடர் விளையாடிக் கழக மைதானத்தில் நடைபெற்றது.
ஆண்களுக்கான இறுதியாட்டத்தில் கழுகுகள் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து பருத்தித்துறை சென்தோமஸ் அணி மோதியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பருத்தித்துறை சென்தோமஸ் அணி 10 ஓவர்கள் முடிவில்  9 விக்கெட்டுக்களை இழந்து 100 ஓட்டங்களைப் பெற்றனர். அவ்வணி சார்பில்  அருள்ரஞ்சன் 5 ஆறு ஓட்டங்கள், 1 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 39, ஓட்டங்களையும்,  ஜீபகாந் 5 ஆறு ஓட்டங்கள், 1 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 38 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தனர்.பந்து வீச்சில் கழுகுகள் அணி சார்பில் துவா, தர்சன், வனஜன் ஆகியோர் தலா இவ்விரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கழுகுகள் அணி 9.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 103 ஓட்டங்களைப் பெற்றனர். அவ்வணி சார்பில் செந்தூரன் 4 ஆறு ஓட்டங்கள்,  3 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 41 ஓட்டங்களையும்,  வனஜன் 3 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 20 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்து வீச்சில் பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக் கழக அணி சார்பில்  பிரசாந்,  அகிலன் ஆகியோர் ஒவ்வொரு விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.
பெண்களுக்கான இறுதியாட்டத்தில் பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக் கழக அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
இறுதியாட்டத்தில்  பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து பருத்தித்துறை சென்தோமஸ் விளையாட்டுக் கழக அணி மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடிய பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக் கழக அணி 5 ஓவர்கள் கொண்ட பந்துப் பரிமாற்றத்தில் ஒர் விக்கெண்டை மாத்திரம் இழந்து 111 ஓட்டங்களைப் பெற்றனர். அவ்வணி சார்பில் நிரோசினி ஒரு 6 ஓட்டம், 7 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 46 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். பந்து வீச்சில் பருத்தித்துறை சென்தோமஸ் அணி சார்பில் றொசானா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பருத்தித்துறை சென்தோமஸ் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 86 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர். அவ்வணி சார்பில் அனிஸ்ரினி 3 ஆறு ஓட்டங்கள், 8 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 57 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். பந்து வீச்சில் பருத்தித்துறை ஐக்கிய அணி சார்பில் நிரோசினி ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்