Thu. Apr 25th, 2024

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 4 கட்டடங்கள் கையளிப்பு

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 4 பிரிவுக் கட்டடங்கள் புனரமைக்கப்பட்டு பாவனைக்காக கையளிக்கப்பட்டன. இந்நிகழ்வு நேற்று(21) பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் மருத்துவ அத்தியட்சகர் வே,கமலநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் மற்றும் நன்கொடையாளர்கள், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள்,  ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
துரித அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் 2020 இன் கீழ் புனரமைக்கப்பட்டு வந்த 4 பிரிவுகளின் கையளிக்கும் நிகழ்வானது நாட்டு நிலைமை காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அளவு எண்ணிக்கையினருடன் மிகவும் எளிமையாக நடைபெற்றது.
இதில் பெண்கள் மருத்துவ விடுதி (விடுதி இலக்கம் 09) பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி  2003 A/L மாணவர்களால் ஓரு மில்லியன் ரூபா செலவிலும், முதிராக் குழந்தைகள் பிரிவு UKஇல் வசிக்கும் குகன் என்பவரின் ஒரு மில்லியன்  நிதியிலும் , முதிராக் குழந்தைகள் பிரிவுக்கு செல்லும் பாதை வெளி கோயிற்கடவை மக்களால் கோயிற்கடவை சன சமூக நிலையத்தால் 2.1 மில்லியன் ரூபா செலவிலும்,  சமையலறை அமரர் தனஞ்சயன் ஞாபகார்த்தமாக அவர்களின் குடும்பத்தினரும் மற்றும் நண்பர்களாலும் புனரமைக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்