Fri. Apr 19th, 2024

பருத்தித்துறையில் எரிபொருள் நிரப்பு நிலைய வீதியை மறித்து மக்கள் போராட்டம்

பருத்தித்துறை துறைமுகம் அருகிலுள்ள கொட்டடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று நள்ளிரவு  எரிபொருள் விநியோகிக்கப்பட்ட வேளை பொதுமக்களால் சுற்றிவளைக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று புதன்கிழமை நள்ளிரவு கொட்டடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நடைபெற்றுள்ளது. அதன் பின்னர் பருத்தித்துறை பொலீஸாருக்கு பொது மக்களால் தகவல் வழங்கப்படாடதையடுத்து குறித்த இடத்திற்கு வருகை தந்த பொலீஸார் 200 லீற்ரர் டீசல் மற்றும் 4 பேரைக் கைது செய்தனர். ஆனால் ஒருவர் மட்டுமே பொலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

எனினும் அவரை பொலீஸ் நிலையத்தில் எச்சரித்து விடுதலை செய்யப்படவுள்ளதாக பருத்தித்துறை போலீஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

நேற்று இரவு 11:00 மணிக்கு பின்னர் ஐந்து வாகனங்கள் மற்றும் கொள்கலன்களில் டீசல் நிரப்பி அனுப்பிக் கொண்டிருந்ததை அறிந்த பொதுமக்கள் குறித்த எரிபொருள் நிலையத்தை முற்றுகையிடப்பட்டு பொலீஸார்  வரவழைக்கப்பட்டு நால்வர் கைது செய்யப்பட்ட நிலையில் மூவர் உடனடியாக விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலைய சம்பவங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளோ அல்லது சட்ட நடவடிக்கைகளோ இடம் பெறாமல் தடுக்கும் வகையில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது ஏழு கொள்கலன் டீசலும் பருத்தித்துறை பொலீஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  இதன் தொடர்ச்சியாக இன்று பிற்பகல் கிராமக்கோடு மற்றும் மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளின் அளவை பார்வையிட வேண்டும் என வீதியை வழிமறித்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.  இதனையடுத்து பொலீஸாரால் கிராமக்கோடு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் முடிவடைந்த நிலையிலும்,  மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அத்தியாவசிய தேவைக்காக ஒதுக்கப்பட்ட 1200 லீற்ரர் எரிபொருளும் காட்சிப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்