Thu. Mar 28th, 2024

பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் பெற்றோருக்கும் எரிபொருள் வழங்குங்கள்

பரீட்சைக்குத் தோற்றும் பெற்றோர்களுக்கு எரிபொருள் வழங்குமாறு பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் க.பொ.த.சாதாரண தர பரீட்சையை எதிர்கொள்ளும் மாணவர்களை உரிய நேரத்தில் பரீட்சையை எதிர்கொள்வதற்கு ஏற்றவிதமாக அவர்களின் பெற்றோர்களுக்கு எரிபொருள் வழங்குமாறும் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தற்போது பல வீடுகளில் துவிச்சக்கர வண்டிகள் இல்லை. இதனால் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பொதுப் போக்குவரத்து நடைபெறாத இடங்களில் இருந்து மாணவர்கள் பலர் நகர்புற பாடசாலைகளுக்கு பரீட்சைக்காக சமூகமளிக்க வேண்டிய தேவையுள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டால் தமது பிள்ளைகளை உரிய நேரத்திற்கு சமூகமளிக்க வைப்பதற்கு மிகுந்த சிரமம் அடைவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே பரீட்சை அனுமதி அட்டையை வைத்து பெற்றோர்களுக்கு குறிப்பிடப்பட்டளவு எரிபொருள் வழங்குவதற்கு அந்தந்த பிரதேச செயலாளர் கருத்திலெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பரீட்சை நோக்குநர்களுக்கு இவ்வனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்