Fri. Mar 29th, 2024

பரபரப்பான ஆட்டத்தில் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி சம்பியன்

இறுதிவரை திக் திக் ஆட்டம் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழகம்  நடாத்திய 19 வயதிற்குட்பட்டோருக்கான கால்பந்தாட்ட தொடரின்  இறுதியாட்டம் இன்று   நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்றது.
இதன் இறுதியாட்டத்தில் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணியை எதிர்த்து பொலிகை பாரதி அணியினர் மோதியது.  ஆரம்பம் முதல் இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் விளையாடிக் கொண்டிருந்தனர். முதல் பாதியாட்டம் ஆரம்பமாகி முதலாவது நிமிடத்திலேயே கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி வீரர் மாதவன் தமது அணிக்கான முதலாவது கோலைப் பதிவு செய்ய, அடுத்த 4வது நிமிடத்தில் பொலிகை பாரதி அணி வீரர் நிதர்சன் கோலைப் பதிவு செய்து பதிலடி கொடுத்தார். தொடர்ந்து இரு அணிகளும் போராட  ஆட்டத்தின் 16 வது நிமிடத்தி கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி வீரர் மாதவன்  தனது அணிக்கான இரண்டாவது  கோலைப் பதிவு செய்ய, அதற்கும் பொலிகை பாரதி அணி வீரர் ரொபின்சன் ஆட்டத்தின் 22 வது நிமிடத்தில் ஒரு கோலைப் பதிவு செய்து பதிலடி கொடுத்தார். இதனால் முதல் பாதியாட்டத்தில் இரு அணிகளும் 2:2 என்ற கோல் எண்ணிக்கையில் சமநிலை வகித்தனர். இரண்டாவது பாதியாட்டம் இரு அணிகளுக்கும் சவாலாக அமைய ஆட்டம் விறுவிறுப்பின் உச்சக் கட்டத்தை எட்டியது. இரு அணிகளும் கோல்கம்பங்களை ஆக்கிரமிக்க முற்பட்ட போதிலும்  கோல் காப்பாளர் மற்றும் பின்கள வீரர்களின் சிறப்பான தடுப்பாட்டத்தின் உதவியுடன் கோல் பெறும் சந்தர்ப்பங்கள் தவற விடப்பட்டது. இருப்பினும் ஆட்டத்தின் 45 வது நிமிடத்தில் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி வீரர்  சுஜாஸ்கன் ஓரு கோலைப் பதிவு செய்ய, ஆட்ட நேர முடிவில் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி  3:2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுச் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி வீரர் சுஜாஸ்கான் , தொடர் ஆட்ட நாயகனாக கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி வீரர்  ஆர்நிகன் , சிறந்த கோல்காப்பாளராக பொலிகை பாரதி அணி வீரர்  நிசான் கியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்