Sat. Apr 20th, 2024

பட்டினிச் சாவை தவிருங்கள்- சுகிர்தன் வேண்டுகோள்

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் விவசாய பொருட்களில் இரசாயண உரம் கலக்கவில்லையா என முன்னாள்  வடமாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இரசாயண உரத்தை தடை செய்யப்பட்டமைக்கு கரவெட்டி பிரதேச கமநலச் சேவைகள் திணைக்களத்தின் முன்பாக விவசாயிகளால் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தியாவில் இருந்து வெங்காயத்தையும், பாகிஸ்தானில் இருந்து அரிசியையும் இறக்குமதி செய்கின்றீர்கள். அவர்கள் வெங்காயத்திற்கும், அரிசிக்கும் இரசாயண உரத்தை போடவில்லையா? உரத்தை நிறுத்திவிட்டு எங்களை மட்டும் விவசாயம் செய்யச் சொன்னால் நாங்கள் என்ன செய்வது. உங்களுடைய தரகுக் கூலிக்காக இந்த அரசு உரத்தை நிறுத்தியுள்ளது. 2015இலும் இந்த அரசு இறக்குமதியிலும் விமானக் கொள்ளளவிலும் ஊழல் செய்துள்ளீர்கள். தற்போது விவசாயிகள் உரத்திலும் ஊழல் செய்துள்ளீர்கள். தயவு செய்து வடக்கு கிழக்கு மக்களை அழித்தது போன்று இலங்கை வாழ் மக்களை அழிக்காதீர்கள். சிங்கள தேசியம் என்று வாக்களித்த மக்கள் இன்று வீதியில் நிற்கிறார்கள். தற்போது சாப்பாட்டுக்கு கூட போராடுகிறார்கள்.  எங்களுக்கு பட்டினி பழக்கம். யுத்த காலத்தில் கூட நாங்கள் சாப்பிட்டுக் கொண்டுதான் இருந்தோம். தமிழ் மக்கள் எந்தச் சூழலில் வாழக் கூடியவர்கள். கொள்கை அற்ற இந்த அரசாங்கத்தை நாம் கலைக்க வேண்டும். விவசாய அமைச்சருக்கு விநயமாக தெரிவிப்பது, தற்போது இரசாயண உரத்தை வழங்குங்கள், எவ்வாறு இயற்கை உரத்தை உற்பத்தி செய்ய வேண்டும் என சொல்லிக் கொடுங்கள்,  படிப்படியாக இரசாயண உரத்தை தடை செய்யுங்கள். இந்தப் பெரும்போக முடிவிலே கஞ்சி கூட குடிக்க முடியாத சூழ்நிலை உருவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்