Thu. Apr 25th, 2024

நீர்நிலை உயிர்காப்பு பயிற்சியாளர்கள் கெளரவிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் நீர்நிலை உயிர்காப்பு (life guard) சர்வதேச தர பயிற்சியை நிறைவு செய்து, சித்தியடைந்தவர்களுக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலரினால் கெளரவிக்கப்பட்டனர்.
அவுஸ்ரேலிய நீர்நிலை உயிர்காப்பு கழகத்தின் பயிற்சி ஒழுங்குபடுத்தலுடன்
அமெரிக்க துணைத்தூதரகத்தின் அனுசரனையில் வடமாகாணத்தில் முதன்முறையாக யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் சர்வதேச தர நீர்நிலை உயிர்காப்பு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான பயிற்சிநெறி 21நாட்கள் இடம்பெற்றிருந்தது.
மாகாண விளையாட்டுத் திணைக்கள வேலைத்திட்டத்தின்
கீழ் குறித்த பயிற்சியில் மாவட்ட விளையாட்டுப் பிரிவினரின் ஒழுங்குபடுத்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு திம்பிலி கிராமத்தை சேர்ந்த க.நிரோசன், ஒட்டுசுடட்டான் முத்தயன் கட்டைச் சேர்ந்த ரா.லஜிதன்,  நாயாறு கிராமத்தைச் சேர்ந்த கு.ஆனந்தபிரசாந், செல்வபுரம் கிராமத்தைச் சேர்ந்த சி.ஸ்ரீஜன்னன்(ஜனா) ஆகியோர் குறித்த பயிற்சியினை நிறைவு செய்து அதிதிறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.
இவர்களை பாராட்டி மதிப்பளிக்கும் முகமாக கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்கள் கலந்து கொண்டு  பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
குறித்த பயிற்சியில் வடமாகாணத்தில் அதிதிறமையை வெளிப்படுத்திய 16 வீரர்களில் நான்கு பேர் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்