Tue. Apr 23rd, 2024

நீதி அமைச்சின் நடமாடும் சேவை

நீதி அமைச்சின் ஏற்பாட்டில் மக்களுக்கான நடமாடும் சேவை எதிர்வரும் ஜனவரி 27, 2022 தொடக்கம் ஜனவரி 30, 2022 வரையான தினங்களில் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.

நீதி அமைச்சின்கீழ் இயங்கும் பல திணைக்களங்கள் மற்றும் நீதித்துறை அமைப்புகள் இந்த நடமாடும் சேவையில் கலந்துகொள்ளவுள்ளன.

காணி விடயங்கள், காணாமல்போனவர்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் சட்ட உதவிகள், போதைப்பொருள் பாவனைக்கு எதிரான சட்ட அணுகுமுறைகள், தேசிய இன மற்றும் மத நல்லிணக்கம் தொடர்பான சட்ட ஆலோசனைகள் உள்ளிட்ட விடயங்களுக்கான சட்டத்துறைசார் உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்