Fri. Apr 26th, 2024

நாளை தடுப்பூசி ஏற்றுமதியை தொடங்கும் இந்தியா , இலங்கையின் அனுமதிக்காக காவல்

ஆறு அண்டைய மற்றும் முக்கிய பங்குதார நாடுகளுக்கு கோவிட் -19 தடுப்பூசிகளை இந்தியா நாளை (ஜனவரி 20) முதல் வாங்கவுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.

இதன்மூலம், பூட்டான், மாலத்தீவு, பங்களாதேஷ், நேபாளம், மியான்மர் மற்றும் சீஷெல்ஸ் ஆகியவை இந்தியா தயாரிக்கும் தடுப்பூசிகளைப் பெறும் முதல் நாடுகளாக இருக்கும் என்று தெரியவருகிறது .

இருப்பினும், இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் மொரீஷியஸில் இருந்து தேவையான உள்நாட்டு அனுமதிகளை பெறுவதற்காக இந்தியா பொறுத்திருப்பதாக அறிவிக்கப்படுள்ளது

இந்திய வெளியுறவு அமைச்சகம் (எம்.இ.ஏ) இன்று (ஜனவரி 19) வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிட் -19 தடுப்பூசிகளை வழங்குமாறு நாட்டிற்கு பல கோரிக்கைகள் வந்துள்ளன.

இதனை தொடர்ந்து , இந்தியா நாளைமுதல் தடுப்பூசி ஏற்றுமதியைத் தொடங்க திட்டமிட்டுள்ளது என்று வெளியுறவு துறை அறிவித்துள்ளது.
இதனிடையே இந்தியா நிறுவனமான பாரத் பையோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட COVAXIN எனும் தடுப்பூசி உரியமுறையில் பரிசோதிக்கமுதலே பாவனைக்கு விடப்பட்டுள்ளதுடன் , இந்த தடுப்பூசியை அயல்நாடுகளுக்கு பணத்துக்கு விற்று பரிசோதனையை மேற்கொள்ள இந்தியா முயற்சிப்பதாக குற்றசாட்டுகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியா அரசியல்வாதிகள் எவரும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை பொதுவெளியில் போட்டுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.. அவர்கள் அமெரிக்கா நிறுவனமான பைஸர் மற்றும் மோடெர்னா தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டுள்ளதாக வதந்திகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்