Sat. Apr 20th, 2024

தொழில்நுட்ப கல்லூரி பரீட்சைகள் திங்கட்கிழமை

நாட்டில் உள்ள அனைத்து தொழில்நுட்ப கல்லூரிகளிலும் NVQ Level 5/6 பரீட்சைகள் எதிர்வரும் 19ம் திகதி  திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பரீட்சைகள் கடந்த  ஏப்பிரல் மாதம் நடைபெறவிருந்த நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ளது கொரோனா தொற்று காரணமாக அனைத்து பரீட்சைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. ஆனால் தற்போது வெளிமாவட்டங்களில் இருந்தும் மாணவர்கள் வருகை தரக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் எதிர்வரும் திங்கட்கிழமை பரீட்சைகள் நடைபெறும் என வவுனியா நெளுக்குளம் தொழில்நுட்ப கல்லூரியின் அதிபர் ஆ.நற்குணேஸ்வரன் அறிவித்துள்ளார். பரீட்சைகள் தொடர்பாக மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால் தமது தொழில் நுட்ப கல்லூரி அதிபரிடமோ அல்லது 0242223664, 0242226720 எனும் தொலைபேசி இலக்கத்துடனோ தொடர்பு கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்