Wed. Apr 24th, 2024

தேசிய விளையாட்டு தினம் கரவெட்டி பிரதேச செயலகத்தில்

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு இன்று கரவெட்டி பிரதேச செயலகத்தில் உடற்பயிற்சி மற்றும் உடல்நல மேம்பாடு தொடர்பான கருத்துரைகள் வழங்கப்பட்டது.
கரவெட்டி பிரதேச செயலாளர் ஈ.தயாரூபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உடல், உள மேம்பாடு தொடர்பாக கரவெட்டி
கிராமிய சித்த வைத்தியசாலை வைத்தியர்.திருமதி ரி.கவிதா அவர்களினால் கருத்துரை வழங்கப்பட்டதோடு , யா/புனித தெரேசாள் மகளிர் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் க.கனகராஜா அவர்களினால் உடற்பயிற்சியும் வழங்கப்பட்டது.
டங்கன் வைற் அவர்களினால் ஒலிம்பிக் போட்டியில் இலங்கை சார்பாக பெறப்பட்ட முதலாவது பதக்கத்தை நினைவுகூரும் முகமாக தேசிய விளையாட்டு தினத்தை இலங்கை அரசு யூலை மாதம் 31ம் திகதி பிரகடனம் செய்துள்ளது.  நாளை விடுமுறை தினமாகையால் இன்று பிரதேச செயலகங்களில் நினைவு கூரும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. டங்கன் வைற் அவர்கள் 400 மீற்ரர் தடைதாண்டல் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கத்தை பெற்று சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்