Tue. Apr 23rd, 2024

தேசிய மட்ட மல்யுத்தத்தில் முல்லைத்தீவு மாணவர்கள் சாதிப்பு

அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மல்யுத்தப் போட்டியில் முதன் முறையாக மு/வித்தியானந்தா கல்லூரி, மு/கலைமகள் வித்தியாலய மாணவர்கள்   தங்கம் மற்றும் வெள்ளிப்  பதக்கங்களைப் பெற்று சாதனையைப் பதிவு செய்துள்ளனர்.
அ‌கில தேசிய மட்ட மல்யுத்தப் போட்டி 22.23,24/11/2022 ஆகிய  3 நாட்கள்  கம்பகாவில் நடைபெற்றது.
இப் போட்டியில்  மு/வித்தியானந்தா கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த ஆர்.றஜிதன் 57-61 கிலோ நிறைப்  பிரிவில்   தங்கப் பதக்கத்தையும்,  மு/கலைமகள் வித்தியாலயத்தைப் பிரதிநிதித்துவம் செய்த ஜெயானந்தராசா வினேசன் 51-55 கிலோ நிறைப் பிரிவில்  வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றுச் சாதனையைப் பதிவு செய்துள்ளனர்.
இப் போட்டியில் வடமாகாணத்தில் ஏனைய மாவட்ட மாணவர்கள் பங்குபற்றாத நிலையில் வட மகாணதில்  போட்டிகள் நடாத்தப்பட்ட நிலையில் தேசிய மட்டத்தில் முல்லைத்தீவு பாடசாலைகள் மாத்திரம் இவ் மல்யுத்த  போட்டியில்  பங்குபற்றியிருந்தனர்.
இப்போட்டியில் வித்தியானந்தா கல்லூரி மாணவர்கள் 12 பேர் பங்குகொண்டதுடன் 5 பேர்  காலிறுதிவரை முன்னேறியதுடன் கலைமகள் வித்தியாலய 7 மாணவர்கள் பங்குகொண்டனர்  ஒருவர் இறுதிவரை முன்னேறியமையும் குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்