Wed. Apr 24th, 2024

தேசிய சாதனை வீரன் மிதுன்ராஜ்

அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் வடமராட்சி கல்வி வலய பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் எஸ்.மிதுன்ராஜ் புதிய சாதனையைப் பதிவு செய்து இவ்வாண்டு நடைபெற்ற தேசிய மட்ட போட்டியில் புதிய சாதனையைப் பதிவு செய்த வடமாகாண வீரர் என்ற சாதனையையும் பதிவு செய்துள்ளார்.

அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தடகள போட்டிகள் கொழும்பு சுகதாஸ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
இதில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் வடமராட்சி கல்வி வலய பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த எஸ்.மிதுன்ராஜ் 45.47 மீற்ரர் தூரம் எறிந்து புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளார்.
2017ம் ஆண்டு எமிலிப்பிட்டிய ரத்னலோகா மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த என்.பி.எல். கே. பத்திரானவினால் 43.85 மீற்ரர் எறிந்த தூரத்தை இவ்வாண்டு பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியைச் சேர்ந்த எஸ்.மிதுன்ராஜ் 45.47 மீற்ரர் தூரம் எறிந்து புதிய சாதனையைப் பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்