Thu. Mar 28th, 2024

துல்லியமான கோல் உடுப்பிட்டி சம்பியன்

கபின்ஸனின் துல்லியமான கோலினால் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

வடமராட்சி கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இடையிலான 20 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான கால்பந்தாட்டத்தின்இறுயாட்டம் இன்று குஞ்சர்கடை கொலின்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.
இறுயாட்டத்தில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி அணியை எதிர்த்து தேவரையாளி இந்துக் கல்லூரி அணி மோதியது.
முதல் பாதியாட்டத்தில் இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் விளையாடினர். இதனால் இரு அணிகளாலும் கோல் எதனையும் பதிவு செய்ய முடியவில்லை. இரண்டாவது பாதியாட்டத்தில் இரு அணிகளும் சமபலத்துடன் தமது பலப்பரீட்சையை தொடர்ந்தனர். ஆட்டம் நிறைவடைவதற்கு 3 நிமிடங்கள் இருக்கும் போது உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி அணி வீரர் கபின்ஸன் மிகச் சிறப்பான கோலைப் பதிவு செய்ய இதுவே ஆட்டத்தின் இறுதிக் கோலாகவும் அமைந்தது.  ஆட்ட நேர முடிவில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி அணி 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுச் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்