Fri. Mar 29th, 2024

துமிந்த சில்வாவுக்கு பதவி கொடுத்து அழகுபார்க்கும் ராஜபக்ச குடும்ப

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்தா சில்வா, பாரத லட்சுமன் பிரேமச்சந்திரா கொலை தொடர்பாக மரண தண்டனை அனுபவித்து வந்திருந்த நிலையில் கடந்த மாதம் சிறப்பு ஜனாதிபதி மன்னிப்பில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்தார். இது பலராலும் எதிர்பார்க்கப்பட்டிருந்தபொழுதிலும் , பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருந்ததுடன் இலங்கையின் அமெரிக்க தூதுவரே இந்த விடுதலை தொடர்பாக அதிருப்தியான கருத்தை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் , தேசிய வீட்டுவசதி மேம்பாட்டு துறையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரது நியமனத்திற்கு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ ஒப்புதல் அளித்துள்ளார், அதற்கான கடிதத்தை கிராமப்புற வீட்டு கட்டுமான மற்றும் கட்டிட பொருட்கள் தொழில் மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் கீர்த்தி ரஞ்சித் அபேசிரிவர்தனத்திற்கு ஜனாதிபதி செயலாளர் அனுப்பியுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலராக இருந்த காலத்தில் , துமிந்த சில்வா முன்னர் பாதுகாப்பு அமைச்சினை கண்காணிக்கும் பொறுப்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்