Thu. Apr 25th, 2024

திங்கட்கிழமை அதிபர், ஆசிரியர்கள் புறக்கணிப்பு- இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம்

நாளை மறுதினம்  திங்கட்கிழமை  பாடசாலைக்கு செல்லாது கஸ்டத்தை வெளிப்படுத்துவோம் என இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா புவனேஸ்வரன் அறிவித்துளாளார்.

இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியானது நாம் எவருமே இதுவரை சந்திக்காதது . இதனை ஒட்டுமொத்த நாட்டு மக்களும் அனுபவிக்கின்றனர் என்பது உண்மை . இந்த வாழ்வாதார போராட்ட சூழ்நிலையில் மாணவரின் கல்விச் செயற்பாடுகளில் அக்கறை கொள்ளாத அரசாங்கம் பாடசாலைகளை நடாத்த முனைகின்றது . இது வேடிக்கையானது. பெற்றோரோடு மாணவரும் அவர்களோடு அதிபர்கள் , ஆசிரியர்களும் என அனைவருமே இரவு பகலாக வீதிகளில் வரிசையில் நிற்கின்றனர் . இவர்கள் வீதியில் நிற்க பாடசாலையை யாருக்காக நடாத்துவது . திங்கட்கிழமை பாடசாலை இயங்கும் முறைபற்றி அரசாங்கம் அறிவித்துள்ளது . நகர்ப்புற பாடசாலைகள் மூன்று நாட்கள் இயங்குமாம் . கிராமப்புற பாடசாலைகள் முழுநாளும் இயங்குமாம் . இது ஏற்புடையதா ? பெருமளவான ஆசிரியர்கள் கிராமப்புற பாடசாலைக்குச் செல்லும் நகர்ப்புறங்களில் இருந்தே செல்கின்றனர் . அவர்கள் எந்த மார்க்கத்தில் பாடசாலைக்குச் செல்வது . பொதுப் போக்குவரத்து பேருந்துகள் கூட அவர்களை ஏற்றிச்செல்ல மறுக்கின்றன . தனியாகச் செல்வதற்கு எரிபொருள் இல்லை . இத்தகைய சூழ்நிலையில் எரிபொருள் தட்டுப்பாட்டை சீர்செய்யும்வரை பாடசாலைக்கு சமூகமளிக்கமாட்டோம் என அமைச்சிற்கும் , செயலாளருக்கும் பணிப்பாளர்கள் , வலயக் கல்விப் பணிப்பாளர்கள் அனைவருக்கும் அறிவித்துள்ளோம் . இதனை அவர்கள் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் . மாகாணங்களின் செயலாளர்கள் , கல்வி ஆகையால் திங்கள் முதல் ( 27.06.2022 ) எரிபொருள் நிலைமை சீராகும்வரை பாடசாலைக்குச் செல்ல முடியாது என்பதனை மனவருத்தத்துடன் அறியத்தருகின்றோம் . இது நாட்டில் உள்ள அனைத்து அதிபர்கள் , ஆசிரியர்கள் , பெற்றோர்கள் , மாணவர்கள் அனைவருக்குமான பொதுவான நெருக்கடி . என்பதால் எவருமே பாடசாலைக்குச் செல்லாது . எமது கஸ்டத்தை முழுமையாக வெளிப்படுத்துவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்