Sat. Apr 20th, 2024

தமிழர்கள் கட்டியிருக்கும் கோவணத்தையும் அவுக்க போகிறாரா விக்னேஸ்வரன்

“தமிழ் மக்கள் 3000 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் வடக்கு கிழக்கினுள், சிங்களவர்கள் எந்தக் காலத்திலும் பெரும்பான்மையாக வாழாத வடக்கு கிழக்கு மாகாணங்களுக்குள் சிங்கள மக்கள் குடிகொள்ளவும் வணிகத்தலங்களை ஏற்படுத்தவும் இராணுவத்தினரைத் தொடர்ந்து வைத்திருக்கவும் வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களிடம் அனுமதிபெற வேண்டும். அப்படி இல்லை என்றால் இந்த நாட்டின் ஜனநாயகம் சிங்களவரால், சிங்களவருக்கு, சிங்களவர் நடத்தும் அரசு என்று பொருள் பட்டுவிடும் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர், நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.”

இவ்வாறு அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். இப்படியான அறிக்கை விடுவதன் மூலம் முன்னாள் முதலமைச்சர் என்னத்தை அடைய முயற்சிக்கிறார் என்று விளங்கவில்லை. இப்படியான அறிக்கைகள் மூலம் சிங்களர்வார்கள் தமிழர்களின் உரிமைகளை தந்துவிடுவார்கள் என்று நினைக்கிறாரா? இது கசப்பானதாக இருந்தாலும் இன்றய நிலையில் சிங்களவர்கள் மனம்மாறி எங்களுக்கு உரிமைகள் தந்தால் மட்டுமே எங்களால் உரிமைகளை பெறமுடியும்.
சுதந்திரத்துக்கு பின் 50 க்கு 50 என்று குமார் பொன்னம்பலம் காலத்தில் இருந்து பின்னர் தனிஈழம் என்று தொடங்கி சிங்களவர்களை உசுப்பேத்தி விட்டு, கடைசியில் எங்களுக்கு மிஞ்சியது அழிவுகளும் வேதனைகளும் தான். சிங்களவர்கள் மிகவும் வலுவான நிலையில் இருக்கிறார்கள். கடந்தகாலத்தில் சிறுபாண்மையினத்தின் தயவின் மூலம் ஆட்சி அமைத்துவந்தவர்கள் , தற்பொழுது சிங்கள மக்களின் வாக்கின் மூலமே ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் நாங்களே!!

1957 ஆம் ஆண்டில் வாகன இலக்கத்தில் சிறி எதிர்ப்பு என்று போராடி கடைசியில் ஒன்றும் நடக்காமல் இருந்து , கடைசியில் சிங்களவன் தானாகவே சிறியை எடுத்து டாஸ் என்று வாகன இலக்கத்தில் கொண்டுவந்தார்கள். சிலவிடயங்களை நாங்கள் எதிர்க்கும் பொழுது அது தானாகவே அவர்களுக்கு அதை செய்வதற்கு உத்வேகத்தை கொடுக்க அவர்கள் அதை வலுக்கட்டாயமாக திணிக்க முயல்கிறார்கள்.

என்கென்னமோ கல்லோயா குடியேற்றத்தை கண்டும் காணாமல் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்திருந்தால் இந்த குடியேற்றங்கள் கூட இவ்வளவு வேகமெடுத்திருக்காதோ என்று தான் எண்ண தோன்றுகின்றது. இதே நிலைமை தான் வடக்கு கிழக்கு எங்கும் பரவிக்கிடக்கும் புத்தர் சிலைகளுக்கும். அவற்றை நாம் கணக்கெடுக்காது விட்டிருந்தால் இவ்வளவு புத்தர் சிலைகள் இன்று இருந்திருக்காது என்று தான் எண்ண தோன்றுகின்றது . வாக்குகளுக்காக எங்கள் அரசியல் வாதிகள் இதனை பெரிசுபடுத்தி இருக்காது விட்டால் இந்த நிலைமை வந்திருக்காது என்றுதான் எண்ண தோன்றுகிறது
50 க்கு 50 மற்றும் கொழும்பில் இருந்து கொண்டே வடகிழக்கு தமிழர்களின் பூர்விக நிலம் போன்ற கருத்துக்களை வைக்காது அமைதியாக இருந்திருந்தால் இந்த பிரச்சினைகள் இவ்வளவு தூரம் வந்திருக்காதோ என்றுதான் எண்ண தோன்றுகின்றது.

இவ்வாறு எங்கள் வாயால் வீரம் பேசியும் மேலும் 30 வருடகாலம் போரிட்டும் எங்களுக்கு ஒன்றும் கிடைக்காமல் போனதற்கு எங்களுக்கு ராஜதந்திரம் போதவில்லையோ என்று எண்ண தோன்றுகின்றது.

இவ்வாறு எல்லாம் கேட்டும் போராடியும் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்று கோவணத்துடன் இருக்கும் நிலையில் திரும்பவும் விக்னேஸ்வரன் போன்றவர்கள் வீரவசனம் போராட்டம் என்று கூறி இருக்கிற கோவணத்தையும் அவுக்கிறதுக்கு முயற்சிக்கிறார்கள் என்று தான் எண்ண தோன்றுகின்றது .
விக்னேஸ்வரன் விட்ட அறிக்கை மஹிந்த ராஜபக்சவுக்கு என்றால் , தற்பொழுது உள்ள பலமான நிலையில் அவர்கள் ஒன்றுக்கு இரண்டு மடங்காக தமிழர்களுக்கு எதிராக செய்வார்கள். இது விக்னேஸ்வரனுக்கும் தெரியதளவுக்கு அவர் சின்ன குழந்தைப்பிள்ளை இல்லை.
அவர் வாக்குகளுக்காகவே இப்படியான அறிக்கைகளை வெளியிடுவதாகவே கருதவேண்டியுள்ளது. இவ்வாறு ராஜதந்திரம் இல்லாமல் வாக்குகளுக்காக வாய்வீரம் பேசி சிங்களவனை உசுப்பேத்தி தமிழர்களின் அழிவுக்கே இவர்கள் வித்திடுவார்கள். இவர்களை பாராளுமனறம் அனுப்பினால் தமிழனுக்கு அழிவுதான் மிஞ்சுமோ என்றுதான் எண்ண தோன்றுகிறது ..
இன்று இருக்கும் நிலையில் முரண்டு பிடித்து ஒன்றயும் பெறமுடியாது என்பது நிஜம். இதையும் மீறி இவர்களின் வீராப்பு பேச்சுக்கள் எல்லாம் தமிழ் மக்களி உசுப்பேத்தி வாக்கு வேட்டைக்கே ஒழிய இதனால் ஒன்றும் ஆகப்போவது இல்லை..உண்மையில் சொன்னால் இப்படியான பேச்சுக்கள் தமிழர்களின் இருப்பை இந்த தீவில் கேள்விக்குறியாக்கும் என்பதே நிஜம்

இந்த கட்டுரை பொது எழுத்தாளர் ஒருவரால் எழுதி நியூஸ்தமிழில் பிரசுரிக்கப்பட்டது. நியூஸ்தமிழுக்கும் இந்த கட்டுரைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை கூறிக்கொள்ள விரும்பிகிறோம்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்