Fri. Mar 29th, 2024

ஞானமுருகன் அக்கடமி அணி சம்பியன்

உரும்பிராய் திருக்குமரன் அக்கடமியினால் வடமாகாணரீதியாக நடாத்தப்பட்ட 13 வயதுப் பிரிவினருக்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் ஞானமுருகன் அக்கடமி அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர். இதன் இறுதியாட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை உரும்பிராய் திருக்குமரன் அக்கடமி மைதானத்தில் நடைபெற்றது.
வடமாகாணத்தில் முதன் முறையாக நடாத்தப்பட்ட இத்தொடரில் வடமாகாணத்தைச் சேர்ந்த 12 அக்கடமிகளின் 17 அணிகள் பங்குபற்றின.
இதன் இறுதியாட்டத்தில்  உரும்பிராய் திருக்குமரன் அக்கடமி அணியை எதிர்த்து  ஞானமுருகன் அக்கடமி அணி மோதியது.
ஆட்டம் ஆரம்பம் முதல் இறுதி வரை இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் முகமாக விளையாடினர். இதனால் இரு அணிகளும் ஆட்ட நேர முடிவில் 1:1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தனர்.
இதனால் சமநிலை தவிர்ப்பு உதைமூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது.
இதில் ஞானமுருகன் அக்கடமி அணி 3:2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர். 3ம் இடத்தை ஹென்றிஸ் அக்கடமி அணி பெற்றது.
கு.பிரசன்னா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக யாழ் பல்கலைக் கழக உடற்கல்வி போதனாசிரியர் மா.இளம்பிறையன், சிறப்பு விருந்தினராக உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் மற்றும் கனடாவில் வாழ்ந்து வரும் உரும்பிராய் மண்ணின் மைந்தன்  ஜெகாந்தன், வைத்தியர் சக்திவேல் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்க பல நூற்றுக்கணக்கில் உதைபந்து இரசிகர்கள் போட்டியை இரசிக்க கலந்து கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்