Fri. Mar 29th, 2024

சுதந்திரதின கால்பந்தாட்ட கிண்ணம் வடமாகாண அணி வசம்

சுதந்திர தின கால்பந்தாட்ட கிண்ணத்தை வடமாகாண அணி சுவீகரித்துக் கொண்டனர்.
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மாகாணங்களுக்கு இடையில் நடைபெற்ற சுதந்திர கிண்ண  கால்பந்தாட்ட தொடரில் வடமாகாண அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
இதன் இறுதியாட்டம் இன்று யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் வடமாகாண அணியை எதிர்த்து தென்மாகாண அணி மோதியது.
முதல் பாதியாட்டத்தில் வடமாகாண அணியின் ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தென்மாகாண அணி திணறியது.
வடமாகாண அணி வீரர்  ஜூட் சுமனின் சுயாதீன உதையை முதலாவது கோலாக விக்னேஸ் கோலாக்க ஆட்டம் விறுவிறுப்படைந்தது. அதனைத் தொடர்ந்து வடமாகாண அணி வீரர்
கீதனின் சிறப்பான பந்துப் பரிமாற்றத்தை மேற்கொள்ள  தேனுஜன் சிறப்பான கோலைப் பதிவு செய்ய முதல் பாதியாட்டத்தில் வடமாகாண அணி 2:0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தனர்.
இரண்டாவது பாதியாட்டத்திலும் வடமாகாண அணி வீரர்களின் ஆட்டத்தில் அனல் பறந்தது.
தேனுஜனின் அழகான பந்துப் பரிமாற்றத்தால் இறுதியாட்டத்திலும் நிதர்சன் ஒரு கோலைப் பதிவு செய்தார். அதன் பின்னர் பலத்த போராட்டத்தில் தென் மாகாண அணி ஒரு கோலைப் பதிவு செய்ய ஆட்ட நேர முடிவில் வடமாகாண அணி 3:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
இதில் ஆட்ட நாயகனாக தங்க காலணியையும், தொடரில் அதிக கோலை (7) பதிவு செய்த வீரராக தங்க பந்தையும் வடமாகாண அணியின் அணித் தலைவர் நிதர்சன் பெற்றார்.
இளம் வீரராக கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவம் செய்த முகமட் முன்சீப், சிறந்த கோல் காப்பாளராக கிழக்கு மாகாண அணியை பிரதிநிதித்துவம் செய்த
முகமட் முர்சின் தங்க கையுறையையும், தொடரின் நன்நடத்தை அணியாக கிழக்கு மாகாண அணியும் பெற்றுக் கொண்டது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்