Fri. Mar 29th, 2024

சுகாதார பணியாளர்களிடம் பரவும் டெல்டா, ஆபத்தான நிலையில் வைத்தியசாலைகள்

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட போதிலும் பல மருத்துவர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுகாதார பணியாளர்களிடையே கோவிட் -19 கொத்தணிகள் உருவாகி வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

தொற்றுநோய்க்கு எதிரான முன் களப்பணியில் இருக்கும் மருத்துவர்கள் உட்பட பெரும்பாலான சுகாதாரப் பணியாளர்கள் கோரோனோ நோய்க்கான அறிகுறி மற்றும் அதற்காக சிகிச்சை பெற்று வருவதாகசுகாதாரக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்

குறிப்பாக மருத்துவமனைகள் அதிகபட்சமாக நிரப்பப்படும் நேரத்தில் புதிய COVID-19 நோயாளிகள் தினமும் கண்டறியப்படும் நிலையில் , சுகாதார அதிகாரிகளுக்கு ஏற்படும் தொற்றுகளால் சுகாதாரத் துறையில் ஆள் பற்றாக்குறைக்கு வழிவகுத்துள்ளது.

வேகமாக பரவி வரும் டெல்டா வகையால் சுகாதாரத் துறை பாதிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லை என்றாலும், தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, டெல்டா மாறுபாடு தான் பேரழிவை ஏற்படுத்தியதாக சந்தேகப்படுவதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர். நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு மற்றும் ஆக்ஸிஜனுக்கான தேவைகள் உயர்ந்துள்ளது என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்