Tue. Apr 23rd, 2024

சிலிண்டர்களின் எரிவாயு கலவை ஆராய்வு

சிலிண்டர்களின் எரிவாயு கலவை ஆராயப்படுவதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இரண்டு தனியார் நிறுவனங்களான ‘இன்டடெக்’ இணைந்து எரிவாயு சிலிண்டர்களின் எரிவாயு கலவையை ஆராய்ந்து வருவதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தினால் வருடாந்தம் வழங்கப்படும் 350 மில்லியன் எரிவாயு சிலிண்டர்களில் ஐந்து அல்லது ஆறு விபத்துக்கள் மாத்திரமே பதிவாகியுள்ளதாகவும் 2015ஆம் ஆண்டு முதல் லாப்ஸ் நிறுவனத்தின் எரிவாயு சிலிண்டர்களில் 12 விபத்துக்கள் மாத்திரமே பதிவாகியுள்ளதாகவும் 9 வணிக வளாகங்கள் மற்றும் எரிவாயு சந்தைப்படுத்தல் முகவர் நிலையங்கள் 2 இல் இடம்பெற்றுள்ளன. எரிவாயு விபத்துக்கள் இல்லாத எந்த நாட்டையும் உலகில் காண முடியாது எனவும் லசந்த அழகியவண்ண குறிப்பிட்டுள்ளார்.

நுகர்வோர் அதிகார சபையினால் 2012 மற்றும் 2009 ஆம் ஆண்டு 5 வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதாகவும், எரிவாயு சிலிண்டரின் தரம், குழாயின் தரம் மற்றும் உபகரணங்கள் ஏனையவற்றின் தரம் குறித்த வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்