Tue. Apr 16th, 2024

கோரோனோ தடுப்பூசி , பணக்கார நாடுகளின் திமிர்..சிக்கலில் வறியநாடுகள்

கோரோனோ தடுப்பூசி வெளிவந்திருக்கும் நிலையில் அதனை பெற்று தங்களது நாட்டு குடிமக்களுக்கு வழங்குவது தொடர்பான போட்டிகள் அதிகரித்தவண்ணம் உள்ளது . உலகில் உள்ள பணக்கார நாடுகள் தங்களது குடிமக்களுக்கு கோரோனோ தடுப்பூசி வழங்குவதற்காக குடிமக்களின் தொகையை விட மூன்று மடங்கான தடுப்பூசிகளை வாங்கவதற்கு தடுப்பூசி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை செய்துள்ளதாக மக்கள் தடுப்பூசி கூட்டணி (The People’s Vaccine Alliance )எனும் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. இந்த தடுப்பூசிகளை 2021 ஆம் ஆண்டுக்குள் வாங்குவதற்கு அவர்கள் ஒப்பந்தங்களை செய்துள்ளார்கள்.
இதில் கனடா நாடு மேலும் ஒருபடி சென்று தங்களது குடிமக்களின் தொகையை விட 5 மடங்கு கோரோனோ தடுப்பூசிகளை வாங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனிடையே அந்த அமைப்பின் தகவல் படி, குறைந்த வருமானம் பெறும் 70 நாடுகளில் 2021 ஆம் ஆண்டுக்குள் 10 இல் ஒருவருக்கே கோரோனோ தடுப்பூசி போடக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக இந்த அமைப்பு அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்துள்ளது.
இதன்மூலம் பணக்கார நாடுகள் மனித உரிமை கட்டுப்பாடுகளில் இருந்து விலகி செல்வதுடன் அவற்றை மீறுகின்றது என்று அந்த அமைப்பு குற்றம் சுமத்தி உள்ளது

அநேகமான பணக்கார நாடுகளில் இந்த தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்