Thu. Apr 25th, 2024

கொலின்ஸின் இறுதியாட்டங்கள் நாளை

வடமராட்சி கொலின்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் கால்பந்தாட்ட தொடரின் இறுதியாட்டங்களும் பரிசளிப்பு விழாவும் நாளை சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு குறித்த கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.

கொலின்ஸ் விளையாட்டுக் கழக தலைவர் ஜெ.ஜெயசந்திரன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை  விருந்தினராக Enter prise prouduct and digital solutions பொது முகாமையாளர் ச.நவநீதன்,  சிறப்பு விருந்தினராக வடமராட்சி உதைபந்தாட்ட லீக் தலைவர் தி.வரதராசன்,  கெளரவ விருந்தினர்களாக சமூக சேவையாளர் ரி.ஜெயசீலன்,  வர்த்தகர் என்.லக்ஷ்மிகாந்தன்,  ASP உணவக உரிமையாளர் கே.பிரதாப் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
கிங் ஒவ் யவ்னா கிண்ணத்திற்கான இறுதியாட்டத்தில் இளவாலை யங்கென்றிஸ் அணியை எதிர்த்து யாழ் சென்.அன்ரனிஸ் அணியும்,
 வட ஹீரோஸ் கிண்ணத்திற்கான இறுதியாட்டத்தில் கொற்றவத்தை றேஞ்சஸ் அணியை எதிர்த்து வதிரி டைமன்ஸ் அணியும் மோதவுள்ளன.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்