Tue. Apr 23rd, 2024

கொரோனோ கொடை வள்ளல் , அரியாலை ஆராதனையின் நாயகன் Paul Satkunarajah வின் அதிரவைக்கும் பின்னணி

இலங்கையில் இருந்து ஜெர்மனிக்கு 1980 ஆம் ஆண்டு புலம்பெயர்ந்து சென்ற சிவராஜா சற்குணராஜா என்பவர் ஆரம்பத்தில் ஒரு இந்து வாகவே இருந்துள்ளார்கள். இவர் பின்னர் 1982 ஆம் ஆண்டு சுவிற்சர்லாந்துக்கு இடம்பெயர்ந்து வாழ்ந்துள்ளார். பின்னர் 1989 ஆம் ஆண்டளவில் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய அவர் 1996 ஆம் ஆண்டு போதகராக ஆனார். அதன் பின்னர் Philadelphia Missionary Church(PMC ) எனும் மடத்தை சுவிற்சர்லாந்தில் உருவாக்கினார்.

அங்கத்தவர்களிடம் இருந்து நன்கொடை வசூலிப்பதன் மூலம் இந்த அமைப்பை அவர் நடாத்தி வந்துள்ளார். இந்த நிலையில் இவருடைய நன்கொடை வசூலிப்பு மற்றும் நிதி மோசடி , ஏகபோக வாழ்க்கை தொடர்பாக 2018 ஆம் ஆண்டளவில் சுவிற்சலாந்தின் SRF எனும் செய்தியமைப்பு இரண்டு கட்டுரைகளை வெளியிட்டது .
இதில் அங்கத்தவர்களிடம் கட்டாய பணப்பறிப்பில் அவர் ஈடுபட்டதாக அங்கத்தவர்களினால் வழங்கப்பட்ட ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டது. அங்கத்தவர்கள் தங்களின் சம்பளத்தொகையில் 10% இவருக்கு வழங்கவேண்டும் என்றும் , அவ்வாறு அவர்களினால் வழங்கப்படாதவிடத்து அவர்களின் அங்கத்துவத்தை இரத்து செய்வதுடன் அவர்களுடனான தொடர்பை துண்டித்ததாகவும் தெரிவித்துள்ளார்கள்.


இந்த நிலையில் இந்த பணத்தை பயன்படுத்தி அவர் ஏகபோக வாழ்க்கை வாழ்வதாகவும், அவருக்கும் அவர்களுடைய உறவினர்களுக்குமாக தொடர்மாடி வீடுகளை 2015 ஆம் ஆண்டு தொடக்கம் Strassackerweg 29 என்னும் முகவரியில் கட்டிவருவதாகவும் அந்த இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது.
2009 ஆம் ஆண்டு விடுதலை புலிகள் சுவிற்சலாந்தில் பலமாக இருந்தவரை அடக்கி வாசித்த இவர் , அதன் பின்னரே தனது லீலைகளை ஆரம்பித்ததாக அவருடைய அமைப்பில் அங்கத்தவர்களாக இருந்து தற்பொழுது நீக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இவருடைய இந்த PMC அமைப்பின் மூலமே இலங்கையில் தனது வேலையை ஆரம்பித்துள்ளார். தற்பொழுது PMC இன்டர்நேஷனல் ஸ்கூல் ஒன்றயும் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
.

 

https://www.bern-ost.ch/Rundschau-Umstrittener-Tamilen-Pastor-baut-Haus-in-Boll-112036

https://www.srf.ch/news/schweiz/massiver-spendendruck-kritik-an-tamilischer-freikirche-pmc

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்