Tue. Apr 23rd, 2024

கைவிரல் அடையாளத்தை நிறுத்த கோரிக்கை

நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளில் கைவிரல் அடையாளங்களை தவிர்த்து வரவுப் பத்தகத்தில் கையொப்பமிடும் நடைமுறையைப் பிற்பற்றுவதற்கு ஏற்பாட்டினைச் செய்யுமாறு அரச உத்தியோகஸ்த்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தற்போது நாட்டில் கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்தே அவர்கள் இவ்வேண்டுகோளை விடுத்துள்ளனர்.  பணப் பரிமாற்றம் உட்பட பல வழிகளில் கொரோனா தொற்று ஏற்படலாம் என சுகாதார அமைச்சு எச்சரித்துள்ள நிலையிலேயே கைவிரல் அடையாளங்களை தவிர்ப்பதற்கு ஏற்பாட்டினைச் செய்யுமாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். வடமாகாணத்தில் பரவலாக தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் அரச நிறுவனங்கள், மற்றும் பாடசாலைகள் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டே இருக்கிறது. ஊழியர்கள் தமது பாதுகாப்பு கருதி முகக் கவசங்கள், கையுறைகள் அணியப்பட்ட போதிலும் கைவிரல் அடையாளங்களை வைப்பதனால் ஒரு இயந்திரத்தில் பலரும் தொட வேண்டி ஏற்படுகிறது.  இதனால் தொற்று ஏற்படக் கூடிய அபாயம் உள்ளது.  எனவே வடமாகாண ஆளுநர்,  கல்வி அமைச்சின் செயலாளர்,  வடமாகாண கல்வி பணிப்பாளர்,  ஆகியோர் கவனத்தில் எடுத்துக் கொள்ளுமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்