Tue. Apr 23rd, 2024

கிளிநொச்சி கல்வி வலயம் இரண்டாக பிரிப்பு

கிளிநொச்சி கல்வி வலயத்தை இரண்டு கல்வி வலயங்களாக பிரித்து கிளிநொச்சி மாவட்டத்தில்  இயங்குவதற்கு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.  கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வளவு காலமும் ஒரு கல்வி வலயமாக இயங்கியுள்ளது. இதனை இரண்டாக பிரிக்க வேண்டும் என பலதரபினராலும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதனடிப்படையில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.  கிளிநொச்சி கல்வி வலயத்தில் 104 பாடசாலைகளில் 2035 ஆசிரியர்கள்,  32028 மாணவர்களைக் கொண்ட கரைச்சி,  கண்டாவளை, பூநகரி, பளை போன்ற கோட்டக் கல்வி அலுவலகங்கள் இயங்குகின்றன. இதில் கரைச்சி கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகள் அனைத்தும் ஒரு கல்வி வலயமாகவும் ஏனைய மூன்று கல்வி வலயங்களான கண்டாவளை,  பூநகரி,  பளை கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகள் இன்னொரு கல்வி வலயமாக பிரிப்பதற்கும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. கரைச்சி கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் 18323 மாணவர்களும், ஏனைய மூன்று கல்வி வலயங்களில் 13705 மாணவர்களும் கல்வி கற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்