Tue. Apr 16th, 2024

காணிகளை அடையாளப்படுத்தும் போது அரச அதிபரின் அனுமதி பெற வேண்டும்- அமைச்சர் திட்டவட்டம்

வனப் பாதுகாப்புத் திணைக்களத்தினரால் காணிகள் அடையாளப்படுத்தப்படுகின்ற போது சம்மந்தப்பட்ட பிரதேச செயலாளரின் ஒப்புதல் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என கடற்றொழில்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
பிரமனந்தானாறு மற்றும் இரணைமடு ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்படுகின்ற காணி அடையாளப்படுத்தும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறும் இன்று  உத்தரவிட்டுள்ளார்.
வனவளத் துறையினரால் காணிகள் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்களால் விவசாயங்கள் செய்யப்படும் நிலங்களையும் அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பொதுமக்களினால் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனையடுத்தே அமைச்சரினால் இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அரச காணிகளில் பொதுமக்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அது தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும்.
மாவட்ட அரசாங்க அதிபரின் ஒப்புதல் இன்றி, காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் செயற்பாடுகள் எவையும் இடம்பெறக் கூடாது என்றும் அமைச்சரினால் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்