Fri. Apr 26th, 2024

கரவெட்டி விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கான அறிவித்தல்

விளையாட்டு துறை அமைச்சு மற்றும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் இணைந்து பிரதேச செயலக பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட விளையாட்டுகளுக்கான வீர, வீராங்கனைகளின் தெரிவுக் குழாம் ஒன்றினை அமைக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதில் ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் இரு விளையாட்டுகள் வழங்கப்பட்டு அதற்கான வீர, வீராங்கனைகள் தெரிவு செய்யப்பட்டவுள்ளனர். இதில் கரவெட்டி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரிவில்

ஆண்களிற்கான  உதைபந்தாட்டம், பெண்களிற்கான கரப்பந்தாட்டம் ஆகிய விளையாட்டுகளுக்கு தெரிவு செய்யப்படவுள்ளனர்.
17 வயது தொடக்கம் 23 வயதிற்குட்பட்ட  ஆர்வமுள்ள வீர, வீராங்கனைகளின் முழுப்பெயர், பிறந்த திகதி மாதம் ஆண்டு , தேசிய அடையாள அட்டை இல, தொலைபேசி இலக்கம் என்பன அடங்கிய விபரத்தினை கழக ரீதியாக தயார் செய்து  2021.03.24ம்  திகதிக்கு முன்னர் கரவெட்டி  பிரதேச செயலக விளையாட்டு பிரிவில் ஒப்படைக்குமாறு கரவெட்டி பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் ஹரிகரன் அறிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்