Fri. Mar 29th, 2024

கரவெட்டி சம்பியன் லீக் ஆரம்பம்

கரவெட்டி சம்பியன் லீக் சுற்றுத் தொடருக்கான கழக சீருடை மற்றும் வெற்றிக்கிண்ணம் அறிமுக நிகழ்வு கடந்த  03.02.2021 புதன்கிழமை  யாழ் பீச் கொட்டலில் இரவு 7.00மணியளவில் நடைபெற்றது.

கரவெட்டி சம்பியன் லீக் குழும தலைவர் தம்பன்துசாந்தன் தலைமையில் இடம்பெற்றது.
கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பிரிவில் வசிக்கும்  வீரர்களின் துடுப்பாட்ட திறனை வளர்க்கும் முகமாகவும்,  இப்பகுதியில் எதிர்காலத்தில் கடின பந்தாட்ட அணியை நிறுவதலை நோக்காக கொண்டும் 10பந்து பரிமாற்றங்களாக அணிக்கு 11பேர் கொண்டதாக இந்த தொடர் அமையவிருக்கிறது.
09 அணிகள் 135வீரர்கள் 40போட்டிகள் கொண்டதாக இமையாணன் இளைஞர் விளையாட்டு கழக மைதானத்தில் வார இறுதி நாட்களில் இடம்பெறுகிறவுள்ளது.
இந்நிகழ்வில் போட்டி அனுசரணையாளர்கள் அணி உரிமையாளர்கள் அணிதலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்