Thu. Apr 25th, 2024

கரவெட்டியில் 87.4% மக்கள் தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் முதலாவது தடுப்பூசியை 87.4% மானவர்களும், இரண்டாவது தடுப்பூசியை 71%மானவர்களும் பெற்றுள்ளதாக கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி செந்தூரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 6 நாட்களாக கூகுள் வரைபடத்தின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட சனச்செறிவான 12 பிரதேசங்களில் காலையும் மாலையுமாக சுகாதார உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து 3714 வீடுகளைத் தரிசிப்புச் செய்தார்கள். இதன் போது 30 வயதிற்கு மேற்பட்ட 7149 பேர் இனங்காணப்பட்டதுடன் இவர்களில் தடுப்பூசி ஏற்றாதவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டம், ஒலிபெருக்கி மூலமும் தொடர்ச்சியான அறிவிப்புகள் வழங்கப்பட்டன.
நடமாடும் சேவை மூலமாக 1362 பேருக்குத் தடுப்பூசி ஏற்றப்பட்டது. பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ஆகக் குறைந்தது 87.4 வீதமானவர்கள் ஒரு தடுப்பூசியையாவது பெற்றுள்ளார்கள் என்பதுடன், 71 வீதமானவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளார்கள். 12.6 வீதமானவர்கள் எந்தவொரு தடுப்பூசியினையும் பெற்றுக் கொள்ளவில்லை.
மேலும் தடுப்பூசி ஏற்றாதவர்கள் தொடர்பாகப் பெறப்பட்ட தகவல்கள் எதிர்காலத்தில் அவர்களையும் தடுப்பூசி ஏற்றச் செய்வதற்குப் பயன்படுத்தப்படும்.
இச்செயற்பாட்டுக்கு உதவிய அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் உபசரிப்புக்களையும் ஆதரவுகளையும் வழங்கிய அமைப்புக்கள் மற்றும் பொது மக்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இச்செயற்பாடு மிகவும் வெற்றிகரமான அனைவராலும் பாராட்டப்படுகின்ற ஒரு செயற்பாடாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்