Wed. Apr 24th, 2024

கரவெட்டியில் 50 ஏக்கர் தரிசு நிலம் புனரமைப்பு

தரிசு நிலமாக காணப்பட்ட 50 ஏக்கர் நிலப்பரப்பில் பெரும்போக பயிர்ச் செய்கை ஆரம்பிப்பதற்கான ஆரம்பகட்ட வேலைகள் இன்று நடைபெற்றது.
சுமார் 30 வருடங்களுக்கு மேலாக
கரவெட்டி கமநல சேவைகள் நிலைய பிரிவுக்கு உட்பட்ட துன்னாலை கிழக்கு கொடிக்கட்டு வயல் தரிசு நிலமாக காணப்பட்டது.
இதனை மீள் பயிர் செய்கையை மேற்கொள்ளவதற்காக கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் முதற் கட்ட நடவடிக்கையாக இன்று வியாழக்கிழமை முட்கம்பி வேலி அமைப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு, வயல் உழவு மேற்கொள்ளபட்டது.
இந்நிகழ்வில் யாழ் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் இ.நிசாந்தன், கரவெட்டி கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் செ.திலீப்குமார், தொழில்நுட்ப உத்தியோகத்தர், மற்றும் கமக்காரா அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
2021/2022ம் ஆண்டுக்கான பெரும்போக பயிர்ச் செய்கை நடைபெறவுள்ளதால் 50 ஏக்கர் நிலப்பரப்பின் விளைச்சல் அதிகரிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்