Thu. Apr 25th, 2024

கரணவாய் கிழக்கு பெண்கள் சாதிப்பு

சதுயாவின் அபாரமான துடுப்பாட்டத்தாலும், சபானாவின் துல்லியமான பந்து வீச்சாலும் கரணவாய் கிழக்கு இளைஞர் விளையாட்டு கழக அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலக வருடாந்த விளையாட்டு விழா 2022 பெண்களுக்கான துடுப்பாட்டப் போட்டியின்  இறுதியாட்டம் கடந்த சனிக்கிழமை கொலின்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் கரணவாய் கிழக்கு இளைஞர் விளையாட்டு கழக அணியை எதிர்த்து வதிரி பொம்மேர்ஸ் விளையாட்டு கழக அணி மோதியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய கரணவாய் கிழக்கு இளைஞர் அணி நிர்ணயிக்கப்பட்ட 5 ஓவர்கள்  முடிவில் எந்தவித விக்கெட்களையும் இழக்காமல்  76ஓட்டங்களைப் பெற்றனர். அவ்வணி சார்பில் சதுயா 52, அபிசனா 11 ஓட்டங்களையும் பெற்றனர்.  77 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி எனக் களம் இறங்கிய வதிரி பொம்மேர்ஸ் விளையாட்டு கழகத்தினரால் கரணவாய் கிழக்கு இளைஞர் விளையாட்டு கழக அணியினரின் பந்து வீச்சிற்கு முகம் கொடுக்க முடியாமல் திணறினர். இதனால்
5 ஒவர்கள் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 29 ஓட்டங்களை பெற்றனர். கரணவாய் கிழக்கு இளைஞர் அணி சார்பில் சபனா 02 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்