Fri. Mar 29th, 2024

கனகராயன்குளம் ம.வி. நூற்றாண்டு விழா ஆரம்ப நிகழ்வு

வவுனியா கனகராயன்குளம் மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இன்று ஆரம்ப நிகழ்வாக 100 பொங்கல் பானை வைத்து பொங்கல் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக முன்னாள் அதிபர் ம.ச.பத்மநாதன் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ம.தியாகராஜா, முன்னாள் வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர் த.தணிகாசலம் முன்னாள் வவுனியா வடக்கு கல்வி வலய நெடுங்கேணி கோட்டக் கல்வி அதிகாரி அ.விநாயகமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் மாணவர்களுக்கான 15 கிலோ மீற்ரர் வீதியோட்டமும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாடசாலையின் பழைய மாணவர்கள்,  முன்னாள் ஆசிரியர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்