Fri. Apr 19th, 2024

ஒரே இரவில் பிள்ளையார் சிலை அகற்றப்பட்டு அந்தோணியார் சிலை வைக்கப்பட்டது.

காட்டுப் பகுதியில் 40 வருடங்களுக்கு மேலாக காணப்பட்ட பிள்ளையார் சிலையை ஒரே இரவில் தூக்கி விட்டு அந்தோணியார் சிலை வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மடு பரப்புக்கடந்தான் வீதியில் இருந்து சுமார் 4 கிலோ மீற்ரருக்கு அப்பால் அமைக்ப்பட்ட பிள்ளையார் சிலையை அகற்றிவிட்டு அந்தோணியார் சிலை வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பல ஆண்டுகளாக மரத்தடியில் இருந்த பிள்ளையாரை கட்டடம் ஒன்று அமைத்து அதில் பிள்ளையாரை வைப்பதற்கு கட்டடம் அமைக்கப்பட்டது.
ஆனால் தற்போது அந்த பிள்ளையார் சிலை அகற்றப்பட்டதுடன், அந்த கட்டடத்தில் அந்தோணியார் சிலை வைக்கப்பட்டுள்ளது.
அப்பகுதி காட்டுப்பகுதியென்பதால் மதங்கள் கடந்து அப்பகுதியால் செல்பவர்கள் அப்பகுதியில் இருந்த பிள்ளையார் சிலையை வணங்கிவிட்டு செல்வது வழக்கமென அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் . இந்நிலையில்தான் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் அப்பகுதியில் சிறிய கோயில் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்த நிலையில் முதல் கட்டமாக மூலஸ்தானம் அமைக்கப்பட்டு அதற்குள் தற்காலிகமாக பிள்ளையார் சிலை வைக்கப்பட்டிருந்தது , இந்நிலையில்தான் குறித்த பகுதியில் உள்ள பிள்ளையார் சிலையை சில விஷமிகள் தூக்கிவிட்டு அந்தோனியார் சிலையை வைத்துள்ளனர் . இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் உட்பட எவரும் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லையென பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்