Thu. Mar 28th, 2024

ஒன்றரை கோடி ரூபா செலவில் உருவான கலாச்சார செயல்கம் கலாச்சார சீரழிவுக்கு பயன்படும் பரிதாபம்

பருத்தித்துறை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதியில் ஒன்றரை கோடி ரூபா செலவில் அத்தியடி பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் 2010 ஆம் ஆண்டு அன்றிருந்த கலாச்சார அமைச்சினால் வழங்கப்பட்ட நிதியில் இக்கட்டிடம் அமைக்க முடிவெடுக்கப்பட்டு,  ஒரு குழு தெரிவு செய்யப்பட்டு குழு மூலமாக கட்டிட வேலைகள் நடைபெற்று வந்தன.  அந்தக் குழுவினால் வேலைகள் முடிவடைந்த நிலையிலும் மிகுதி வேலைகள் செய்து முடிக்க முடியாத நிலையிலும் கட்டடம்  இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. ஒன்றரை கோடி ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட கட்டிடத்தின் ஜன்னல்கள் கதவுகள் தற்போது உடைக்கப்பட்டு உள்ளது. அங்கு கலாச்சார சீரழிவுகளும் நடைபெறுவதாக பொதுமக்கள் விசனம் கொண்டுள்ளார்கள். தற்பொழுது அந்த கலாச்சார மண்டபத்தை திறப்பதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு வட மாகாண ஆளுநரிடம் பொது மக்கள் முறையிட்டுள்ளார்கள்

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்