Wed. Apr 24th, 2024

ஏன் போராட்டம்? ஏன் கைவிடுகிறார்கள் எனத் தெரியாமல் பலரும் குழப்பம்

ஏன் போராட்டங்கள் நடத்துகிறார்கள்? ஏன் கைவிடுகிறார்கள்? எனத் தெரியாத அளவிற்கு நடைபெறும் போராட்டங்களால் மக்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறிக்கோள்கள் இல்லாமல் நடைபெறும் தொழிற்சங்க போராட்டங்களின் பின்னால் தொழிற்சங்க உறுப்பினர்கள் பின்னால் செல்வது வேதனைக்குரிய விடயமாகும்.
அவசர காலச் சட்டத்தை நீக்க வேண்டும்? ஊழல் இல்லாத அரசை உருவாக்க வேண்டும்? அமைதிவழியான போராட்டகாரர்களுக்கு குண்டர்கள் குழப்பம் விளைத்தமை? போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜனாதிபதி, பிரதமர்  உட்பட அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தொழிற்சங்கப் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் இவற்றில் பிரதமர் மட்டுமே பதவி விலகியுள்ளார். இந்நிலையில் நாட்டில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.  இன்னிலையில் சில தொழிற்சங்கங்கள் போராட்டத்தை கைவிட்டுள்ளனர். ஏன் போராட்டம் ஆரம்பித்தார்கள்? ஏன் கைவிடுகிறார்கள்? என்ற தெளிவான விளக்கம் எதுவும் இல்லாமல் போராட்டங்களை கைவிடுகிறார்கள். ஒவ்வொரு தொழிற்சங்கங்கள் பின்னால் இருக்கும் உறுப்பினர்களை மூடர்கள் என நினைக்கிறார்களா? எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இவ்வாறு குறிக்கோள் இல்லாமல் செயற்படும் தொழிற்சங்கங்கள் பின்னால் இணைந்து இனிமேல் செயற்படுவது தொடர்பாக தீர்மானிக்கப்படும் எனவும் சங்க உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என மக்கள் எழுச்சி போராட்டம் தொடர்ந்தும் இடம் வருவதும் குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்