Sat. Apr 20th, 2024

எரிபொருள் வழங்கப்படும் வாக்குறுதி – போராட்டம் கைவிடப்பட்டது

நெல்லியடி மத்திய கல்லூரியில் மதிப்பீட்டு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் என்ற பொலீஸாரின் வாக்குறுதியை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டு மதிப்பீட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வினாத்தாள் மதிப்பீட்டு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் எரிபொருள் பெற்றுத் தருமாறு கோரி தற்போது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
நெல்லியடி மத்திய கல்லூரியில் மதிப்பீட்டு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களே இவ்வாறான போராட்டத்தை முன்னெடுத்தனர்.
எரிபொருள் தமக்கு முறையாக கிடைக்கப் பெறுவதை உறுதி செய்யாவிடின் நாளை முதல் மதிப்பீட்டு பணியில் ஈடுபடமாட்டோம் என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக அறிந்து குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட நெல்லியடி பொலீஸ் பொறுப்பதிகாரி காஞ்சன விமல வீர அவர்கள் இன்று திங்கட்கிழமை பிற்பகல் நெல்லியடி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் வழங்கப்பட உள்ளது. இதில் நெல்லியடி மத்திய கல்லூரியில் மதிப்பீட்டு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் அனைவரும் பகுதி பகுதியாக வருகைதந்து எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியும் என வாக்குறுதி வழங்கியதையடுத்து ஆசிரியர்கள் தமது போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்