Sat. Apr 20th, 2024

எரிபொருள் கிடைக்காவிட்டால் 500ற்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடும் அபாயம்

பாண் உற்பத்திக்கும், விநியோகத்திற்கும் தேவையான எரிபொருளை வழங்காவிட்டால் எதிர்வரும் வாரத்தில் நூற்றிற்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்படும் என யாழ் மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் கார்த்திகேசு பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் உள்ள பேக்கரிகளின் பாண் உற்பத்திக்கும் விநியோகத்திற்கும் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு ஏற்றவழி வகுக்காவிட்டால் வரும் வாரங்களில் யாழ் மாவட்டத்தில் இயங்கும்  நூற்றிற்கும் மேற்பட்ட பேகாகரிகள் மூடப்படும் நிலையும் அங்கு பணியாற்றும் 2500ற்கும் மேற்பட்ட பணியாளர் குடும்பங்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
நடமாடும் பாண் விநியோகத்தில் ஈடுபடும் 500ற்கும்  மேற்பட்ட முச்சக்கர வண்டிகளின் நிலை பாதிக்கப்படுவதோடு அதனூடாக வாழ்வாதாரத்தை நம்பியுள்ள குடும்பங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பாண் உற்பத்திக்கான மூலப்பொருளின் தட்டுப்பிட்டாலும் விலையேற்றத்தாலும் பாதிக்கப்பட பேக்கரி உரிமையாளர் தற்போது எரிபொருள் தட்டுப்பாட்டால் மேலும் பாதிப்படைந்துள்ளனர்.
பாண் உற்பத்திக்கான தேவையான அளவு ஓரளவு டீசல் கிடைக்கின்ற போதிலும் நடமாடும் விநியோகத்திற்கு தேவையான எரிபொருள் கிடைக்காமையால் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக உரியவர்கள் கவனமெடுக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்